
யார் என்ன சொன்னாலும் நான் இப்படித்தான் நடிப்பேன் என்று அடம்பிடித்துக்கொண்டிருக்கும் இளையதளபதி நடித்து (?) கடந்த வாரம் ரிலீசான வேட்டைக்காரன் விஜயின் அழகிய தமிழ்மகன், குருவி, வில்லு வரிசையில் நான்காவதாக இணைந்துள்ளது. சண் டிவியின் உதவியுடன் 93 % ஒப்பினிங்குடன் முதல் மூன்று நாட்களில் வேட்டைக்காரன் 87 லட்சம் ரூபாயை சென்னையில் வசூலித்தது. ஆனால் இந்தவாரம் திரைஅரங்குகளில் மக்கள்வரவு 70% ஆக குறைந்துள்ளது, மற்றும் இந்தவார வசூல் 59 லட்சத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. விஜயின் அண்மைய படங்களில் இரண்டாவது வாரத்தில் 70% இற்கு மக்கள்வருகை குறைவடைந்தது வேட்டைக்காரனுக்கேயாகும். வில்லு, குருவி என்பன இரண்டாம் வாரத்தில் 80% மக்கள் வருகையை கொண்டிருந்தன,பின்னரே படிப்படியாக வீழ்ச்சியடைந்தன.ஆனால் வேட்டைக்காரன் ஒரேயடியாக 70% இற்கு வீழ்ச்சியடைந்தது மிகப்பெரும் பின்னடைவே. இந்த இரண்டு வாரங்களில் மொத்தவசூல் 2 கோடி 10௦ லட்சம், இது கந்தசாம,ஆதவன் என்பன இரண்டாம் வாரத்தில் வசூலித்ததிலும் பார்க்க குறைவான தொகை.
சண் நெட்வோர்க்கால் கூட விஜயை காப்பாற்ற முடியவில்லை. வழமையாக ஒரு நடிகனின் படத்தை அவனது வெறிப்படத்துடன்தான் ஒப்பிடுவார்கள்,விஜயின் முன்னைய படங்களையும் அவ்வாறே கில்லியுடன் ஒப்பிட்டார்கள்.ஆனால் இன்று வேட்டைக்காரன் எப்படி என்று ஒருவரிடம் கேட்டால் 'கில்லி' அளவுக்கு இல்லை என்றுகூட யாரும் கூறுவதில்லை , மாறாக குருவியை விட பரவாயில்லை என்றுதான் கூறுகிறார்கள். இதிலிருந்தே தெரிகிறது விஜய் தனது படங்களை எந்தத்தரத்தில் கொடுக்கிறார் என்று.பின்னர் எப்படி படம் வெற்றியடையும்? எங்கே இரண்டு நாள் கேப் கொடுத்தால் ஊடகங்கள் படத்தை தோல்வி என்று கூறிவிடுவார்களோ என்று அஞ்சி அடுத்தநாளே படம் வெற்றி என்று அறிவித்து விட்டார் நம்ம தலைவலி,சாரி தளபதி.முழுப்பூசனிக்காயை எப்படி சோற்றில் மறைக்க முடியும்?
ஆனால் நம்ம தளபதி சற்றும் சலனமிலாமல் அடுத்த படத்தையும் இதேபோல மொக்கை படமாக கொடுத்துவிட்டு கொஞ்சம் கூட வெட்கப்படாமல் அடுத்தநாளே வெற்றி என்று அறிவிப்பார்.
வேட்டைகாரனும் போச்சா?
Subscribe to:
Post Comments (Atom)
வணக்கம்
வணக்கம்! உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்
வலைப்பூக்கள்
Archives
About this blog
என் நண்பனிடம் இருந்து கற்றுக்கொண்டதன் மூலம் 26.12.2009 அன்றிலிருந்து தொடங்கப்பட்ட இந்த வலைப்பூ முற்றுமுழுதாக சினிமா செய்திகளை தாங்கியது "தமிழ்சிகரம்"






0 comments:
Post a Comment