'ஜக்குபாய்' கலைஞருக்கு, சரத்-ராதிகா திமுகவுக்கு ?

Thursday, January 21, 2010 · 0 comments


'ஜக்குபாய்' படம், இறுதிக்கட்டத் தொழில் நுட்ப வேலைகள் முடிவதற்கு முன்னதாகவே, இணையத்தில் வெளியாகியதும், அதன் பின் அப்படத்தின் தயாரிப்பாளரான ராதிக சரத் குமார், சரத் குமார், பத்திரிகையாளர் சந்திப்பில் இந்தப் பிரச்சனையை வெளிப்படுத்தியதும், இது குறித்த முறைப்பாட்டினை தமிழக முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு வந்ததும் வெளிவந்த தகவல்கள்.

முதல்வரின் உடனடி நடவடிக்கையால் தொடர்புடை சிலர் கைதானதாகவும் செய்தி. பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினி, 'படத்துக்கு நீங்க செலவு செய்யாமலே நல்ல பப்ளிசிட்டி கிடைச்சிருக்கு, கவலப்படாம படத்தை ரிலீஸ் பண்ணுங்க' என்று சொன்ன போது, சோர்ந்து போயிருந்த ராதிகாவும், சரத்குமாரும் உற்சாகமானார்கள். அதெ உற்சாகத்தோடு படத்தை முடித்து, வெளியிட முயன்றால் படத்தை வேண்டுவதற்கு யாரும் முன்வரவில்லையாம் எனத் தெரியவருகிறது.
15 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்ட்ட படத்தை வாங்க யாரும் வராவிட்டாலும், சொந்தமாக வெளியிடலாமென முடிவு பண்ணிய தயாரிப்பாளர்களுக்கு, பொருத்தமாகத் தியேட்டர்களும் கிடைக்கவில்லையாம். இந்த நிலையில் 'ஜக்குபாய்' படத்தை அடிமாட்டு விலைக்கு கலைஞர் டி.வி வாங்கியிருப்பதாகத் தகவல். இந்த வர்த்தகத்துக்குப் பின்னாலும் ஒரு அரசியல் பேரம் பேசப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது. அதன்படி இந்த வருட இறுதிக்குள் சரத்குமாரின் சமத்துவக்கட்சி, திமுக ஜோதியில் சங்கமாகிவிடும் எனக் கூறப்படுகிறது.

இந்தப் பேரங்களினால் அதிக மன உளைச்சலுக்க ஆளாகியிருப்பவர் ராதிகாதான் எனத் தெரிய வருகிறது. 'ஜக்குபாய்' வெளியான விடயம் செய்தியான போதே, இதற்குப் பின்னால் அரசியல் இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்ட்டமை குறிப்பிடத்தக்கது. ஆக 'ஜக்குபாய்' கலைஞருக்கு, சரத்-ராதிகா திமுகவுக்கு றிடர்ன்; வியாபாரம் ஓவர் என்கிறது சென்னைத் தகவல்கள். இந்தத் தகவல்கள் ஊடகங்களுக்குக் கசியாதிருக்க வேண்டுமென சரத் விரும்பினாராம். ஆனால் கசிந்தால்தானே அரசியல்.
Read more

எந்திரன் …… இன்னும் சில தகவல்கள் !

· 0 comments

இருபத்தை ஆண்டுகளுக்கு முன் ஜானி படத்தில் ஜீன்ஸ் - டீ.சர்ட் ஆடையில் எத்தனை இளமையான ரஜினியை பார்க்கமுடிந்த்தோ அதே யூத்ஃபுல்னெஸ் இப்போது எந்திரன் ஸ்டில்களில் தெரிகிறது. ஐஸ்க்ரீம் பிரபஞ்சத்தின் பிரமிப்பாண
அழகி ஐஸ்வர்யா ராயுடன்



இயக்குநர் ஷங்கர் புத்தம்புது வலைமணையில் 'எந்திரன்' படங்களைப் பார்த்ததும் எப்படிச் சாத்தியமாச்சு இது என வாய் பிளந்து கிடக்கிறார்கள் ரஜினியின் ரசிகர்கள்.

''எந்திரன்' படபிடிப்பு தொன்னூறு சதவிகிதம் முடிஞ்சாச்சு! படத்தின் முதல்பாதி கலகல.. மீதிப் பாதி 'ரோலர் கோஸ்ட்' ஸ்பீடில் படு விறுவிறு'' என தனது ப்ளாக்கில் ரசிகர்களின் பல்ஸை எக்குத் தப்பாய் எகிற வைத்திருக்கிறார் ஷங்கர். இதோ நமது பங்குக்கு எந்திரன் படத்தின் கதை என்ன என்று இதுவரை வெளிவராத ரகசியத்தை இதோ நமது 4தமிழ்மீடியா ரசிகர்களுக்காக படையல் செய்கிறோம்.

எந்திரன் படத்தில் ரஜினி சயின்டிஸ்ட், ரோபோ என இரண்டு ரோல்களில் நடித்திருக்கிறார். ''சயின்டிஸ்ட் ஆக வரும் ரஜினி மனிதர்களுக்கு உள்ள சிக்ஸ் சென்ஸ் டெக்னாலஜியுடன் ரோபோ ஒன்றை உருவாக்குகிறார், அதை நாட்டின் நன்மைகளுக்காக பயன்படுத்த திட்டமிட்டுகிறார். ஆனால், ரோபோ ஐஸ்வர்யா ராயை காதலிக்கிறது.. கவிதை எழுதுகிறது... கவிதை வாசிக்கிறது.. ரோபோவின் சிலிக்கான் இதயம் காதலில் விழுகிறது... ரோபோவை பற்றி தெரிந்துகொண்ட வில்லன் அதை தன் கன்ட்ரோலில் கொண்டுவர நினைக்கிறார். வில்லனிடமிருந்து ரோபோவை காப்பாற்றுவதுடன், ரோபோவைக் கொண்டே வில்லனையும் கொல்கிறார் சயின்ட்டிஸ்ட் ரஜினி. இதுதான் எந்திரனின் கதை திரைகதை.

ரோபோ பேசும் பன்ச் டயலாக்குகளில் எல்லாம் காமெடி ததும்புவதுடன், 'சிவாஜி'யில் ரஜினிக்காக விவேக் அடிக்கும் பன்ச் போல..

இதில் சந்தானத்தை விட்டு பன்ச் டயலாக் அடிக்க வைத்திருக்கிறார்கள். ஹாலிவுட் படங்களான 'பேட்மேன் ரிட்டர்ன்', 'மென் இன் ப்ளாக்' ஆகிய படங்களுக்கு காஸ்ட்யூம் மற்றும் மேக்கப் துறையில் பணியாற்றியவர்கள் ரஜினிக்கும், ஐஸ்ஸ{க்கும் காஸ்ட்யூம், மேக்கப் விஷயங்களை கவனித்துக்கொள்கிறார்கள். இரண்டு பாடல்களை ஹாவாய் தீவிலிம் பிரேஸிலிலும் எடுத்திருக்கிறார்கள். எந்திரன் தகவல் போதுமா..? இன்னும் கொஞ்சம் வேணுமா? அடுத்த அதிரடித் தகவலுக்கு காத்திருங்கள்.
Read more

பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் திரையுலகிலிருந்து ஒய்வு?

· 0 comments


பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் திரையுலகில் இருந்து விரைவில் ஓய்வு பெறவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. மும்பையில் சமீபத்தில் நடந்த திரைப்பட விழாவில் நடிகர் அமிதாப் பச்சனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
இதன்பின் உரையாற்றிய அமிதாப் தனது மகனும் நடிகருமான அபிஷேக் பச்சன் திரைப்படத் துறையில் இன்னும் நீண்ட தூரம் போக வேண்டியுள்ளது. ஆனால் எனது பயணம் முடிந்து விட்டது. நான் விரைவில் ஓய்வு பெறுவதே சிறந்தது என எண்ணுகிறேன். எனது எல்லைக்கோடு முடிந்து விட்டதாகவே உணர்கிறேன் எனக் கூறியதை அடுத்தே இத்தகைய செய்திகள் கிளம்பியுள்ளன. 1969ம் ஆண்டு திரைப்படம் நடிக்கத் தொடங்கிய அமிதாப் இன்று வரை கிட்டத்தட்ட 42 ஆண்டுகளாக தொடர்ந்து பாலிவுட்டில் இன்னமும் புதிதாக இளம் ரசிகர்களை உருவாக்கி வருகிறார். சமீபத்தில் 13 வயது சிறுவனாக இவர் நடித்த பா திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை அடைந்ததுடன் கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்றமை குறிப்பிடத் தக்கது. ஓய்வுக்குப் பின்னர் அமிதாப் பச்சன் அரசியலுக்கு வர வாய்ப்பில்லை என அவரது தீவிர ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். பாலிவுட்டின் மூத்த நடிகரும் சூப்பர்ஸ்டாரும் ஆன அமிதாப் பச்சன் நடிப்பில் இன்னமும் டீன் பட்டி, சூபைட் எனும் இரு படங்கள் 2010 இல் வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Read more

புலி வருது...! புலி வருது...! சிம்பு பேர்ல புலி வருது!

· 0 comments

சிம்புவும் - த்ரிஷாவும் ஜோடி சேர்ந்திருக்கும் இரண்டாவது படம் விண்ணைத் தாண்டி வருவாயா . முதலில் இருவரும் டூயட் ஆடிய படம் 'அலை'. இரண்டு படங்களில் ஜோடி சேர்ந்துட்டா


காதல் என்று கும்மியடிப்பது தமிழ்சினிமாவுக்கு புதிதா என்ன?

சிம்புவும்-த்ரிஷாவும் காதலிக்கிறாங்கப்பான்னு எந்த புண்ணியவாளனோ கிளப்பிவிட்ட புரளியில் மீடியா இஷ்ட்த்திற்க்கு செய்திகளை உற்பத்தி செய்ய அந்த செய்திகளே சிம்பு த்ரிஷா இருவரிடமும் நெருகத்தை வளர்த்திருக்கிறதாம்.
சமீபத்தில் சென்னையின் பிரபல ஐந்து நட்சத்திர விடுதியில் விண்னைத்தாண்டி வருவாயா டீம் சென்னை இசை வெளியிட்டை முன்னிட்டு இரவு பார்ட்டில் கும்மாளம் போட்டிருக்கிறது. இந்த பார்டிக்கு வந்த சிம்புவும் த்ரிஷாவும் நட்சத்திர விடுதியின் ரூப் கார்டன் தனிமையில் இரவு 1 மணிவரை முழ்கி விட்டார்களாம்.

அதேபோல விண்ணைத்தாண்டி வருவாயா பாடல் காட்சி படப்பிடிப்புக்காக மால்டா தீவுக்கு சென்றபோது இருவரும் நெருக்கமாக இருந்ததாகவும் கவுதம் மேன்ன் வட்டாரத்திலிருந்து நம்பிக்கையான தகவல். ஆனால் சிம்பு இப்போதும் இதை மறுக்கிறார். "உண்மைய சொல்லப்போனா பாடல் காட்சிக்காக மால்டா தீவுக்கு போனபோது த்ரிஷாவிடம் நான் பேசக்கூட நேரமில்ல. அந்த அளவுக்கு நான் எனது பர்சனல் வேலையில் பிஸியா இருந்தேன். எனது இயக்கத்தில் தயாராக இருக்கும் இரண்டு படங்களான 'மன்மதன் -2', 'வாலிபன்' ஆகிய படங்களுக்கான ஸ்கிரிப்ட்டை எழுதி முடித்துவிட்டேன். கே.வி. ஆனந்த் படம் முடிந்த கையோடு முதலில் வாலிபனை ஆரம்பிக்கப்போகிறேன் என்றார் தனக்கு நெருக்கமான மீடியா நண்பர்களிடம்.

மிக முக்கியமான செய்தி. வாலிபன் படத்தில் சிம்புவின் கேரக்டர் பெயர் சார்லஸ் ஆண்டனி. அதாவது பிரபாகரனின் மகன் பெயர். எப்படியிருக்கு சிம்புவின் இந்த அதிரடி.
Read more

அஞ்சலியின் க்ளாமர் பார்வை!

· 0 comments


கற்றது தமிழ் படத்தில் காந்தமாய் வசிகரித்த குடும்ப அழகு அஞ்சலி எங்கே எனத்தேடினால் ‘அங்காடி தெரு’, ‘ரெட்டைச்சுழி’ என இரண்டு படங்களில் சைலண்டாக நடித்து முடித்து அலட்டல் இல்லாமல் அடுத்த வாய்ப்புக்காக கத்திருக்கிறார். " இங்கே அறிமுகமாற முதல் படம் ஹிட் ஆனாதான். அதுல நடிச்ச ஹீரோயின லக்கி கேர்ள்ன்னு சொல்லுவாங்க. ஹீரோ எத்தன பிளாப் கொடுத்தாலும் அவருக்கு மார்க்கெட் இருந்துகிட்டே இருக்கும்பாங்க.

இந்த மாதிரி மூடநம்பிக்கை பாலிவுட் வரைக்கும் சகஜம். கற்றது தமிழுக்குப் பிறகு எனக்கு ஏழு வாய்ப்புக்கள் வந்தது. எல்லாமே சராசரி ஹீரோயின். ஆனா நான் ஏத்துக்கல. சினிமால கொஞ்ச காலம் இருக்கனும்ண்ணு ஆசப்பட்டு இரண்டு படங்கள மட்டும் ஒத்துகிட்டேன். அந்த படங்கள்தான் இந்த ரெண்டும்.

ரெட்ட சுழியில் ஒரு பாடல் மட்டும் பாக்கி இருக்கிறது. இரண்டு படங்களும் தமிழ்ல எனக்கு ஒரு புதிய இடத்த தரும். கற்றது தமிழ் எனக்கு சிறந்த அறிமுகபடமாக அமைஞ்சதுல ரொம்ப மகிழ்ச்சி. க்ளாமர்இ நீச்சல் உடை, முத்தக் காட்சி எல்லாம் சினிமாவில் சர்வ சாதாரணம். அதை போய் நாம் பெரிதாக பேசிக் கொண்டிருக்க வேண்டாம்..

முகம் சுழிக்கிற அளவுக்கு க்ளாமர் செய்ய வேண்டும் என எந்த நடிகையும் விரும்புவதில்லை. சில படங்களில் கவர்ச்சி பேசப்படுகிறது. சில படங்களில் ஓவர் கவர்ச்சின்னு திட்டுறாங்க. பாராட்டும், திட்டும் சினிமாவுக்கும், விளையாட்டுக்கும் முக்கியம். விமர்சனங்கள் இல்லேன்னா எந்த துறையும் சிறப்பாக செயல்பட முடியாது. எனக்கு க்ளாமர் சரியாக வராது என்பது என்னோட கருத்து. ரசிகர்கள் எங்கிட்ட க்ளாமரை எதிர்பார்க்கல என்பதும் எனக்கு தெரியும். க்ளாமர் கதைகள் வந்து எனக்கு பிடித்திருந்தால் நிச்சயம் செய்வேன். கதைகளுக்கு முக்கியத்துவம் உள்ள சினிமாக்கள் மட்டுமே இங்கே வெற்றி பெறுகிறது. க்ளாமர் மட்டும் இங்கே வெற்றி பெறாது” அற்புதமாகச் சொல்கிறார் அஞ்சலி.
Read more

இன்னொரு நமிதா எங்கே?

· 0 comments


இந்திரவிழா படத்தில் ஹேமமாலினி என்ற முன்னாள் கவர்ச்சிக்கன்னியின் பெயரைத் தாங்கி அறிமுகமானர் இளம் நடிகை ஷ்ருதி பிரகாஷ். அவரது உடல் தோற்றத்தைக் கண்டு இனி நமீதா வீட்டுக்குப் போய்விட வேண்டியதுதான் என்ற புரட்சிரமான கண்டுபிடிப்பைச்செய்தது தமிழக மீடியா. நமீதாவின் கால்ஷீட் கிடைக்காத பலரும் ஹேமமாலினியின் வீட்டு வாசலில் நிற்க ஆடிப்போனாராம்.

“ இந்திர விழாவுல க்ளாமர் பண்ணினேன். இல்லன்னு சொல்ல்ல. அதுக்காக நான் அதே மாதிரி கேரக்டர்ஸ்தான் பண்ணுவேன் முடிவுக்கு வந்துடுறாங்க. சில பேர் ரெக்கமண்டேஷனோட வர்றாங்க. கதை என்ன்ன்னு கேட்டா... பொத்தாம் பொதுவா நல்ல கதையத்தான் எடுப்போம். டிஸ்கஸன் நடந்துகிட்டு இருக்குங்கிறாங்க.
நான் எப்படி கால்ஷீட் கொடுக்க முடியும். அப்புறம் கதைன்னு வந்து சொன்னவங்களும் என்னை எப்படி விஷூவலா எக்ஸ்பிளாய்ட் பண்ணலாம்ண்னு பார்க்கிராங்க. அதான் நல்ல கேரக்டர் கிடைச்சா தமிழ்ல பண்ணுவோம்ன்னு இங்கே வந்துட்டேன்” என்று பெங்களூரில் இருந்தபடியே கைபேசி வழியே கொதிக்கிறார்.

“மொதல்ல ஹேமமாலினிங்கிற பேரை மாத்துனதே இந்த மாதிரி தப்பான எண்ணத்த மாத்தத்தான்” என்றவர் நடிகர் ஜீவனுடன் நான் அவனில்லை இரண்டாம் பாகம், சத்யராஜ், சுந்தர்.சி ஆகியோருடன் "குரு சிஷ்யன்' படங்களில் நடித்து முடித்து விட்டு தமிழில் நல்ல பாத்திரங்கள் எதுவும் அமையாததால் கன்னடத்தில் “ ஆடு...ஆடு...ஆட்டா” என்ற படத்தில் நாயகியாக நடித்துக்கொண்டிருக்கிறார். தமிழில் சுசி கணேசன் இயக்கத்தில் வெளியான ‘திருட்டுப் பயலே' படத்தின் கன்னட ரீமேக்தான் இந்தப்படம்.

“ திருட்டு பயலே படத்தைப் போட்டுக் காட்டி சோனியா அகர்வால் கேரக்டர்தான் நீங்க பண்றீங்கன்னு சொன்னாங்க. உடனே ஒகே சொல்லிட்டேன். அப்பிடியொரு க்யூட் கேரக்டர். அதுவே மாளவிகா கேரக்டர் பண்ணுங்கண்ணு சொல்லியிருந்தா நோ சொல்லியிருப்பேன். “ என்ற ஸ்ருதியிடம் உங்களை எல்லோரும் நமிதாவுக்கு போட்டி என்றல்லவா கோடாம்பாக்கத்தி பேசினார்கள் என்றால், “நமீதா என்னை விட சீனியர்; அவரோடு என்னை ஒப்பிட்டுப் பேசுவது சரியல்ல. நிச்சயமா நான் அவர் வழியை தேர்ந்தெடுக்கிற பொண்னு இல்ல.

அதுதான் வழின்னு நினைச்சிருந்தா என் கையில இப்போ பத்து படம் கூட வச்சிருக்க முடியும். கதையில்லாம க்ளாமர் பன்றதுல எனக்கு விருப்பமில்ல. என்னோட உடம்பை கேரக்டருக்காக "ஸ்லிம்' ஆக மாற்றவும் தயாராக இருக்கேன். எனக்கு நடிக்க வாய்ப்பு வேணும். இயக்குநர்கள் நெனைச்சா முடியும். தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழிகளில் வாய்ப்புகள் வந்தாலும் தமிழ்ல நல்ல நடிகைன்னு பேர் வாங்கனும். இது தப்பான ஆசையா என்ன?” என்கிறார். இவரது கேள்விக்கு கோடாம்பாக்கத்திடம் பதில் இருக்கிறதா?
Read more

புதிய பறவை "எங்கே நிம்மதி" பாடலுக்கு இணையாக 'அசல்' பாடல் : வைரமுத்து

Monday, January 4, 2010 · 0 comments


அஜீத் நடித்து வெளிவர இருக்கும் படம் 'அசல்'. இப்படத்தில் அஜீத்குமாருக்காக, வைரமுத்து எழுதிய பாடல் சிவாஜி நடித்த 'புதிய பறவை' படத்தில் இடம்பெற்ற ``எங்கே நிம்மதி?'' என்ற பாடலுக்கு இணையாக, `அசல்' படத்துக்காக கவிஞர் வைரமுத்து எழுதியிருக்கிறாராம். அந்தப்பாடல் "எங்கே, எங்கே, மனிதன் எங்கே?'' எனத் தொடங்குகிறதாம்.

"எங்கே? எங்கே? மனிதன் எங்கே?
மனிதன் உடையில் மிருகம் இங்கே!
ஓநாய் உள்ளம் நரியின் கள்ளம்
ஒன்றாய்ச் சேர்ந்த உலகம் இங்கே...
வலிகளால் வந்த வரங்களால்
வாழ்க்கையில் ஞானம் கொண்டேன்...
காதல் என்றால் கண்ணில் யுத்தம்
கண்ணீர் எல்லாம் வெள்ளை ரத்தம்
உறவும் நட்பும் பிம்பம் பிம்பம்
உள்ளம் எங்கே நம்பும்? நம்பும்?
பொய்களின் கரைக்கு நடுவிலே
போகுதே வாழ்க்கை நதி!
ஜனனம் உண்மை மரணம் உண்மை!
தந்தானே-கடவுள் தந்தானே...
அந்த ரெண்டைத் தவிர எல்லாம்
பொய்யாய்ச் செய்தானே-மனிதன் செய்தானே...
காடும் மரமும்-என் காலில் புற்கள்
குன்றும் மலையும் கூழாங்கற்கள்
சாம்பலில் உயிர்க்கும் பறவை போல் சாதிக்கவே பறக்கின்றேன்..."

- இப்படிச் செல்கிறது இந்தப்பாடல். பரத்வாஜ் இசையில், வைரமுத்து எழுதிய இந்த பாடல், முதலில் பின்னணியில் மட்டும் ஒலிக்கும் பாடலாக இருந்தது. வைரமுத்துவின் யோசனைப்படி, அஜீத்குமார் வாய்விட்டு பாடும் பாடலாக மாற்றப்பட்டு இருக்கிறது
Read more

வணக்கம்

வணக்கம்
வணக்கம்! உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்

வலம் வரும் நண்பர்கள்

நாட்டு கொடிகளுடன் நண்பர்கள்

free counters

Archives

About this blog

என் நண்பனிடம் இருந்து கற்றுக்கொண்டதன் மூலம் 26.12.2009 அன்றிலிருந்து தொடங்கப்பட்ட இந்த வலைப்பூ முற்றுமுழுதாக சினிமா செய்திகளை தாங்கியது "தமிழ்சிகரம்"