> அ‌ஜித்துக்கு எதி‌ரிகளில்லை

Saturday, December 26, 2009 ·


ஆளுக்கு தகுந்தபடி பாடல் எழுதுவதில் கவிப்பேரரசு வைரமுத்து திறமையானவர். சூழலுக்கு ஏற்பவும் அற்புதமாக எழுதுவார்.

விஜய், அ‌ஜித் மோதல் உச்சத்தில் இருந்தபோது அ‌ஜித்துக்கு இப்படி எழுதினார். “இமயத்தில் என் கொடி பறந்தால் உனக்கென்ன, எனக்கொரு நண்பனாக இருக்கவும் உனக்கு தகுதியில்லை...”

மோதி விளையாடு படத்தில் சரணின் எதி‌ரிகளை மனதில் வைத்து, உன்னை எதிர்ப்பவன் நிர்வாணமாக நிற்பான் என்று எழுதினார். இதை மேடையில் கவிப்பேரரசே தெ‌ரிவித்தார்.

அசல் படத்துக்கும் கவிப்பேரரசுதான் பாடல். சமீபத்தில் இவரது பாடல் ஒன்றை ஏவிஎம்-மில் படமாக்கினர். அ‌ஜித்துடன் ஆடியவர் பாவனா. பாடல் இப்படி தொடங்குகிறது.

அதி‌ரி புதி‌ரி பண்ணிக்கடா
எதி‌ரி உனக்கு இல்லைடா...

பாடல் நெடுக தல-யின் புகழை கவிப்பேரரசு வார்த்தையாக்கியிருக்கிறார். பிரமாண்ட அரங்கில் அதைவிட பிரமாண்டமாக எடுத்திருக்கிறார் சரண்.

இரண்டு வ‌ரிகளிலேயே பாடல் பட்டையை கிளப்பும் என்பதை யூகித்துவிடலாம்

0 comments:

வணக்கம்

வணக்கம்
வணக்கம்! உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்

வலம் வரும் நண்பர்கள்

நாட்டு கொடிகளுடன் நண்பர்கள்

free counters

Archives

About this blog

என் நண்பனிடம் இருந்து கற்றுக்கொண்டதன் மூலம் 26.12.2009 அன்றிலிருந்து தொடங்கப்பட்ட இந்த வலைப்பூ முற்றுமுழுதாக சினிமா செய்திகளை தாங்கியது "தமிழ்சிகரம்"