ஓடிப்போலாமா – எனது பார்வையில்

Saturday, December 26, 2009 ·



டிகை சங்கீதாவின் தம்பி பரிமள் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம்.

அப்பா இல்லாமல் அம்மாவின் பாசமான வளர்ப்பில் வளரும் பரிமள் படிப்பில் பதினாறு அரியர் வைத்துக்கொண்டு பொறுப்பில்லாமல் நண்பர்களுடன் ஊரை சுற்றுகிறார். அப்படிப்பட்டவரின் கண்களில் அழகுப்பெண் சந்தியா பட்டுவிட அப்புறம் என்ன? காதல் தான்.

அவரை எப்படியாவது காதலித்து கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக அவர் குடியிருக்கும் பிளாட்டுக்கு வீட்டை மாற்றி போகிறார். அங்கு அவருடன் நட்புடன் பழகி காதலை சொல்ல, சந்தியாவோ நீ உன்னோட படிப்பு முடித்து விட்டு வா என்கிறார். உடனே பரிமள் ஊர் சுற்றுவதை நிறுத்தி விட்டு அரியர் வைத்த பாடங்களை படித்து பாஸாகிறார்.

இதற்கிடையே அந்த பிளாட்டில் இருக்கும் தனது மாமாவுக்கும்,தனது அப்பாவுக்கும் இருக்கும் சொத்து தகராறில் இரண்டு குடும்பமும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாமல் பிரிந்து வாழ்கிறார்கள்.ஒரு கட்டத்தில் தனது மாமாவின் வீட்டை சந்தியாவின் அப்பா தனது வீடு என்று கோர்ட்படி ஏற..,

சந்தியாவின் முறைப்பையனோ சந்தியாவிடம் நாம் இருவரும் கல்யாணம் செய்து கொண்டால் பிரிந்து போன நமது குடும்பமும் ஒன்று சேர்ந்து விடும், அதே நேரம் அந்த வீடும் எங்களுக்கு கிடைத்து விடும் என்று சொல்கிறார்.

அதற்காக நீ வீட்டை விட்டு ஓடிப்போய் விட்டு ஒருவாரம் கழித்து வா.,வீட்டுக்கு பக்கத்தில் வந்தவுடன் நாம் இருவரும் ஒன்றாக வீட்டுக்கு வருவோம். உடனே நாம் இருவரும் ஒன்றாகத்தான் ஓடிப்போனோம் என்று இருவருக்கும் திருமணம் செய்து வைத்து விடுவார்கள் என்று யோசனை சொல்கிறார். அதற்கு சம்மதிக்கும் சந்தியா கடிதம் எழுதி வைத்து விட்டு ஊட்டிக்கு செல்கிறார்.

இந்த யோசனையை சந்தியாவை காதலிக்கும் பரிமள் ஒட்டு கேட்டு விட்டு தனது வீட்டில் கடிதம் எழுதி வைத்து விட்டு சந்தியாவை அவருக்கு தெரியாமலேயே பின் தொடர்ந்து போகிறார். அங்கு ஊட்டியில் ஒரு ரௌடி கும்பலிடம் மாட்டிக்கொள்ளும் சந்தியாவை பரிமள் காப்பாற்றி தான் வேறு வேலைக்காக வந்ததாக சொல்லி சமாளித்து விட்டு மீண்டும் இருவரும் ஒன்றாக வீட்டுக்கு வருகிறார்கள்.


இருவரும் காதலிப்பதாக அவர்களுடைய அப்பா,அம்மா கல்யாணம் செய்து வைக்க முடிவெடுக்க இருவரும் தாங்கள் ஒன்றாக ஓடிப்போகவில்லை என்று ஓடிப்போனதின் உண்மையான காரணத்தை சொல்ல அதை கேட்கும் சந்தியாவின் அப்பா மனம்மாற பிரிந்து போன இரண்டு குடும்பங்களும் ஒன்று சேர்ந்து திருமணத்துக்கு தயாராகிறார்கள்.அந்த திருமணம் நடந்ததா..?பரிமள் காதல் என்ன ஆனது..? என்பதை ஓடிப்போலாமா என்ற பாடலுடன் தந்திருக்கிறார்கள்.



நாயகனாக வரும் பரிமள் நடனத்தில் ஒ.கே ரகம் என்றாலும் நடிப்பிலும்,லட்சனத்திலும் ஆள் பார்ப்பதற்கு ரொம்ப சுமார். பணம் இருந்தால் யார் வேண்டுமானாலும் ஹீரோவாகி விடலாம் என்பதற்கு இவரும் ஒரு உதாரணம்.

வர வர மாமியா கழுத மாதிரி போனாலாம்கிற மாதிரி வர வர சந்திய ரொம்ப லால்கு குறைஞ்சிட்டு வர்றாங்க. சந்தியா மேக்கப் போடாமல் நடித்தாலே அழகா இருப்பாங்க போலருக்கு..,கண்ணுக்கு கீழ புருவத்துல மை,ரோஸ் பவுடர்ன்னு பார்க்கவே சகிக்கல..,

படத்துல காமடிக்கின்னு தனியா ஆள் கிடையாது பரிமள்,சுமன்செட்டிகூட ரெண்டு நண்பர்கள் இவங்களோட அரட்டை தான் காமடியாம்.

பொதுவா பெரிய ஹீரோக்கள் படங்கள்ல டாட்டா சுமோவுல காட்டுகத்து கத்திக்கிட்டு வ்விள்ளனா வர்ற கோட்டா சீனிவாசராவ்,மகாதேவன் ரெண்டு பெரும் இந்தப்படத்துல நல்ல குணச்சித்திர நடிப்பை வெளிக்காட்டியிருக்காங்க.

படத்தோட மியூசிக் டைரக்டர் டி.இமான் தான்னு பாடல்களை கேட்டாலே டக்குன்னு தெரிஞ்சுக்கலாம் அந்த அளவுக்கு அவரோட டியுனையே அவர் காப்பியடிச்சி பாடல்களை கொடுத்திருக்காரு.

படத்தை இயக்கியிருப்பவர் புதியவர் கண்மணி, பரிமளைப் போன்ற புதிய ஹீரோக்கள் நடிக்கும் படங்களில் ரொம்ப சாதாரணமான கதையை கொடுத்தால் அது ரசிகர்களை சென்று சேர்வது கடினம் என்பதற்கு இந்தப்படத்தின் கதையும் ஒரு உதாரணம்.

பெரும்பாலும் நாயகன் கல்லூரியில் படிக்காமல் ஊர்சுற்றுவது,வணிக வெற்றிக்காக சம்பந்தம் இல்லாமல் ரகசியாவின் கவர்ச்சி நடனத்தை காட்டுவது என்று வழக்கமான மசாலாப்பட இயக்குனர்கள் செய்யும் அத்தனை தவறுகளையும் படத்தில் செய்திருக்கிறார் இயக்குனர் கண்மணி.

படம் என்பது பொழுதை போக்கத்தான் என்பதெல்லாம் சரி தான். அதற்காக ஹீரோ 16 அரியர் பாடங்களையும் ஒரே மாதத்தில் படித்து எல்லா பாடங்களிலும் பாஸாவது உண்மையிலேயே ஏற்றுக்கொள்ள முடியாதது.

படத்தின் இறுதியில் ‘ஓடிப்போலாமா..,ஓடிப்போலாமா...’ என்ற பாடல் வருகிறது,இந்தப் பாட்டை படம் ஆரம்பிச்ச உடனே போட்டுருந்தா நாங்க அப்பவே ‘ஓடிப்போயிருப்போமே’ன்னு தியேட்டரில் குரல் வருவதை தவிர்க்க முடியவில்லை

0 comments:

வணக்கம்

வணக்கம்
வணக்கம்! உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்

வலம் வரும் நண்பர்கள்

நாட்டு கொடிகளுடன் நண்பர்கள்

free counters

Archives

About this blog

என் நண்பனிடம் இருந்து கற்றுக்கொண்டதன் மூலம் 26.12.2009 அன்றிலிருந்து தொடங்கப்பட்ட இந்த வலைப்பூ முற்றுமுழுதாக சினிமா செய்திகளை தாங்கியது "தமிழ்சிகரம்"