அகற்றிய ரஜினி பேனரை திரும்ப வைக்கச் செய்த ரசிகர்கள்!

Sunday, January 3, 2010 ·


கோவை: பொள்ளாச்சியில் ரசிகர்கள் வைத்த ரஜினியின் டிஜிட்டல் பேனர்களை அரசு அதிகாரிகள் திடீரென்று அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக பொள்ளாச்சியில் திரண்ட ரஜினி ரசிகர்கள், மற்ற பேனர்களையெல்லாம் விட்டுவிட்டு ரஜினியின் பேனர்களை மட்டும் அகற்றுவது நியாயமா என கேள்வி எழுப்ப, மீண்டும் அவற்றை எடுத்த இடத்திலேயே வைத்தனர் அதிகாரிகள்.
பொள்ளாச்சி மத்திய பஸ் நிலையம், கோவை ரோடு, தேர்நிலை, திருவள்ளுவர் திடல், கடைவீதி போன்ற இடங்களில் அரசியல் கட்சிகள், ரஜினி ரசிகர்களின் டிஜிட்டல் போர்டு மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
பிற ரசிகர் மன்றங்கள் சார்பில் சினிமா பிளக்ஸ் போர்டுகளும் வைக்கப்பட்டுள்ளன. தனியார் மற்றும் அரசு சம்பந்தப்பட்ட விளம்பர போர்டுகள் குறிப்பிட்ட காலக் கெடுவில் அப்புறப்படுத்தப்படுகின்றன. அதே போல அரசியல் மற்றும் பிற பேனர்களும் அகற்றப்பட வேண்டும் என சிலர் கூறினர்.
இதைத் தொடர்ந்து மத்திய பஸ் நிலையம் முன்பு ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் வைக்கப்பட்டிருந்த புத்தாண்டு, பொங்கல் வாழ்த்து பேனர்களை நகர்நல அதிகாரிகள் அகற்றினார்கள்.
தகவல் அறிந்ததும் ரஜினி ரசிகர்கள் அங்கு திரண்டனர். அரசியல் கட்சிகளின் போர்டுகள் அப்படியே இருக்கும்போது ரஜினி மன்ற பிளக்ஸ் போர்டுகளை அகற்றுவது ஏன் என்று நகர்நல அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எல்லா பேனர்களையும் அகற்றினால் நாங்களும் அகற்றிவிடுவோம் என்றனர்.
இதைத்தொடர்ந்து பொங்கல் வாழ்த்து தொடர்பான டிஜிட்டல் போர்டுகளை எடுத்த இடத்திலேயே மீண்டும் வைத்தனர். அதன் பிறகே ரசிகர்கள் கலைந்து சென்றனர்

0 comments:

வணக்கம்

வணக்கம்
வணக்கம்! உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்

வலம் வரும் நண்பர்கள்

நாட்டு கொடிகளுடன் நண்பர்கள்

free counters

Archives

About this blog

என் நண்பனிடம் இருந்து கற்றுக்கொண்டதன் மூலம் 26.12.2009 அன்றிலிருந்து தொடங்கப்பட்ட இந்த வலைப்பூ முற்றுமுழுதாக சினிமா செய்திகளை தாங்கியது "தமிழ்சிகரம்"