கமலின் அடுத்த பட தலைப்பு… யாவரும் கேளிர்!
கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கமல் நடிக்கும் அடுத்த படத்துக்கு தலைப்பு.. யாவரும் கேளிர்.
த்ரிஷாதான் நாயகி என்கிறார்கள்.
உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. படத்துக்கு இசை ஸ்ருதியா, ரஹ்மான அல்லது ஹாரிஸா என்பதில் சின்ன தயக்கம் நிலவுகிறதாம். இரண்டொரு நாட்களில் அதுவும் சரியாகிவிடுமாம்.
அஞ்சாதே… பார்ட் 2
மிஷ்கினை கமல் செட்டில் செய்துவிட்டார் என்று கூறியிருந்தோம் அல்லவா… அந்த செட்டில் விவரம் இது:
மிஷ்கினும் இப்போது ஒரு படம் இயக்குகிறார். தயாரிப்பாளர் உதயநிதி. இவரும் சேரனும் நாயகர்களாக நடிக்கிறார்களாம். அஞ்சாதே படத்தின் இரண்டாம் பாகமாம் இந்தப் படம்.
உதயநிதியை தயாரிப்பாளராக்கியவர் கமல்தான் என்பது சொல்லித் தெரிய வேண்டுமா என்ன?
கிறிஸ்துமஸ் பார்ட்டி… விடியவிடிய லூட்டி!
திரையுலகில் கடுமையாக மோதிக் கொள்ளும் ரசிகர்களைக் கொண்ட அந்த இரு இளம் நடிகர்களும் சமீபத்தில் கிறிஸ்துமஸ் பார்ட்டி கொண்டாடியிருக்கிறார்கள் குடும்பத்துடன். இடம்: நீலாங்கரை பங்களா.
விடிய விடிய தண்ணீரில் மிதந்த இருவரும் மனசு விட்டு ஜாலியாக பேசி மகிழ்ந்தார்களாம். தங்களுக்கு போட்டியாக வரும் நடிகர் பற்றியெல்லாம் கூட பேசியிருக்கிறார்கள்.
கூடவே இருந்த நடிகர்களின் மனைவிமார்களும் அவர்களை இஷ்டப்படி இருக்கட்டும் என விட்டுவிட்டார்களாம். பார்ட்டி முடிந்து வெளியேறும்போது அதிகாலை 4 மணியாம். இரு நடிகர்களில் ஒருவரை கார் டிரைவர்தான் தூக்கி வந்து காரில் அமர வைத்து வீட்டுக்கு அழைத்துப் போனாராம்.
பாவம்.. மன உளைச்சலை நண்பனிடம் கொட்டித் தீர்த்ததால் வந்த நிம்மதி களைப்பு போலிருக்கிறது
கிறிஸ்துமஸ் பார்ட்டி… விடியவிடிய லூட்டி!
Subscribe to:
Post Comments (Atom)
வணக்கம்
வணக்கம்! உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்
வலைப்பூக்கள்
Archives
About this blog
என் நண்பனிடம் இருந்து கற்றுக்கொண்டதன் மூலம் 26.12.2009 அன்றிலிருந்து தொடங்கப்பட்ட இந்த வலைப்பூ முற்றுமுழுதாக சினிமா செய்திகளை தாங்கியது "தமிழ்சிகரம்"






0 comments:
Post a Comment