எந்திரன்… மனதை அள்ளும் புதிய படங்கள்

Sunday, January 3, 2010 ·




எந்திரன்… மனதை அள்ளும் புதிய படங்கள்!
இயக்குநர் ஷங்கர் முதல் முறையாக இணையதளம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். இந்த இணையதளத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்க, அவர் இயக்கும் எந்திரன் – தி ரோபோ படத்தின் புதிய ஸ்டில்கள் மற்றும் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட படங்கள் சிலவற்றை முதல் முறையாக வெளியிட்டுள்ளார்.
ஆனால் இந்தப் படங்கள் அனைத்தையும் பல வாரங்களுக்கு முன்பே நாம் பார்த்துவிட்டோம், நமது நண்பரும் படத்தின் முக்கிய டெக்னீஷியனுமான ஒருவரது லேப் டாப்பில். கிட்டத்தட்ட 400 படங்கள்!
ஒவ்வொரு படத்திலும் நாம் இதுவரை பார்த்திராத அசத்தல் ஸ்டைலில் ரஜினி. ஜானியில் நாம் பார்த்த அந்த வசீகர ரஜினியை மிஞ்சும் அளவுக்கு அருமையாக அவரைக் காட்டியிருக்கிறது ஷங்கர் டீம்.

இதுகுறித்து முன்பே எழுதியிருந்தது நினைவிருக்கலாம் (தலைவருடைய இந்த ஸ்டில்களைப் பார்த்து இன்றைய சுண்டைக்காய்கள் பலருக்கும் அடிவயிற்றில் நெருப்பெரிவது உறுதி!).
இந்த ஸ்டில்கள் இப்போது வெளிவந்திருப்பதன் பின்னணி சற்று சுவாரஸ்யமானது.. யாரும் அறியாதது!

கடந்த சில வாரங்களாகவே எந்திரன் படங்களை இணைய தளங்களுக்கும் மீடியாவுக்கும் தரவேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை காட்டினார் ஷங்கர். அனைவருக்கும் தருவதற்கு அவர் தயாராக இருந்தாலும், படத்தின் தயாரிப்பாளர்களான சன் பிக்சர்ஸ் இதற்கு ஒப்புக் கொள்ளாததால், யாருக்கும் இந்த நிமிடம் வரை தரவில்லை.
அதன் பிறகுதான் தனது நீண்ட நாள் திட்டமான இணையதளத்தை புத்தாண்டு முதல் துவங்கியுள்ளார். ஏற்கெனவே அவர் இணையதளம் துவங்கியிருந்தாலும் அவர் அதை தீவிரமாக அப்டேட் செய்யும் மூடுக்கு வந்ததற்கு முக்கிய காரணம் இது.
இந்த தளத்தின் மூலம் ரசிகர்களின் சந்தேகங்கள், கேள்விகள் பலவற்றுக்கும் பதில் தர முடிவு செய்துள்ளார் ஷங்கர்.


இதுகுறித்து அவர் தளத்தில் இப்படி குறிப்பிட்டுள்ளார்:
“லோனாவாலாவிலிருந்து எந்திரன் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு இப்போதுதான் திரும்பியுள்ளேன். வாரத்தின் ஏழு நாட்களும் 24 மணிநேரமும் தொடர்ந்து எந்திரனுக்குத் தேவைப்படுகிறது. இதனால் என்னைப் பற்றி, எனது படங்கள் பற்றி, அது குறித்த சந்தேகங்கள் கேட்க விரும்பும் சினிமா விரும்பிகளுடன் பேசக் கூட நேரமில்லை.
எனவே அவர்களுக்கு பதிலளிக்கும் ஒரு வாய்ப்பாக இந்த வலைப்பூவைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளேன். உங்கள் கேள்விகளைக் கேளுங்கள்… நேரமிருக்கும் போது பதில் தருகிறேன்…” என்று குறிப்பிட்டுள்ளார்.
இணையதள உலகுக்கு இந்தியாவின் மிகச்சிறந்த படைப்பாளிகளுள் ஒருவரான ஷங்கரை வரவேற்போம், புத்தாண்டு வாழ்த்துக்களுடன்!

ஷங்கரின் தளங்கள்:
www.directorshankar.com
www.directorshankaronline.com

0 comments:

வணக்கம்

வணக்கம்
வணக்கம்! உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்

வலம் வரும் நண்பர்கள்

நாட்டு கொடிகளுடன் நண்பர்கள்

free counters

Archives

About this blog

என் நண்பனிடம் இருந்து கற்றுக்கொண்டதன் மூலம் 26.12.2009 அன்றிலிருந்து தொடங்கப்பட்ட இந்த வலைப்பூ முற்றுமுழுதாக சினிமா செய்திகளை தாங்கியது "தமிழ்சிகரம்"