அசல் ஆடியோவை வெளியிடும் ரஜினி!

Sunday, January 3, 2010 ·


அஜீத் நடித்த அசல் படத்தின் ஆடியோவை வெளியிடுகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி.

ரஜினியே எனக்கு முன்னோடி, அவர்தான் என்னைப் பக்குவப்படுத்தினார் என்று கூறிவரும் அஜீத், தனது படங்கள் அனைத்திலும் ரஜினி பங்கேற்பதை முக்கியமாகக் கருதுகிறார். பரமசிவன் படத்திலிருந்து தொடர்ந்து ரஜினிதான் இவரது படங்களைத் துவக்கி வைத்து வருகிறார்.
அந்த வகையில் அசல் படத்தையும் ரஜினியே துவக்கி வைத்தார். அடுத்து வருகிற 4-ம் தேதி திங்களன்று நடக்கும் இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டையும் ரஜினியே முன்னின்று நடத்துகிறார்.
ஆனால் இதனை தனிப்பட்ட முறையில் குடும்ப நிகழ்வாக நடத்துவதால் அழைப்பிதழ் உள்ள பத்திரிகையாளர்கள் தவிர வெளியார் யாருக்கும் அனுமதியில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அசல் ஆடியோ விழாவை ஆரம்பத்தில் சத்யம் திரையரங்கில் வைத்து நடத்தத் திட்டமிட்டிருந்தனர். ரஜினிதான் தலைமை விருந்தினர் என்றும் அப்போதே முடிவு செய்து அவரிடம் தெரிவித்தபோது மகிழ்ச்சியுடன் சம்மதித்தாராம்.
ஆனால் பின்னர் சில சென்டிமெண்ட் காரணங்களுக்காக தனிப்பட்ட விழாவாக நடத்திக் கொள்ளலாம் என ராம்குமாரும் பிரபுவும் முடிவு செய்துவிட்டதாக படத்தின் பிஆர்ஓ டைமண்ட் பாபு தெரிவித்தார்.
அசல் படத்தை நடிகர் திலகத்தின் வீட்டில் துவக்கி வைத்தவரும் ரஜினிதான் என்பது நினைவிருக்கலாம்.
சரண் இயக்கியுள்ள இந்தப் படம் அஜீத்தின் 49 வது வெளியீடு. 50 வது படம் குறித்த அறிவிப்பினையும் இந்த விழாவிலேயே அஜீத் அறிவிக்கக் கூடும் என்கிறார்கள். இந்தப் படத்தை கவுதம் மேனன் இயக்குகிறார்.

0 comments:

வணக்கம்

வணக்கம்
வணக்கம்! உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்

வலம் வரும் நண்பர்கள்

நாட்டு கொடிகளுடன் நண்பர்கள்

free counters

Archives

About this blog

என் நண்பனிடம் இருந்து கற்றுக்கொண்டதன் மூலம் 26.12.2009 அன்றிலிருந்து தொடங்கப்பட்ட இந்த வலைப்பூ முற்றுமுழுதாக சினிமா செய்திகளை தாங்கியது "தமிழ்சிகரம்"