
திருவெண்காடு புதன் ஆலயத்தை சுற்றி சின்ன சின்ன கற்களை கட்டி வீடு செய்திருப்பார்கள் பக்தர்கள். இப்படி செய்தால் சீக்கிரம் வீடு கட்டலாம் என்பது ஐதீகமாம்! இப்படி கனவிலும், பக்தியிலும் நம்பிக்கையை விதைத்து விட்டு அறுவடைக்கு காத்திருக்கிற சாமானியர்களுக்கு ரஜினி செய்த காரியம், புதன் பெருமானே செய்த காரியமாக பட்டாலும் ஆச்சர்யமில்லை. தனது ரசிகர் மன்றத்தை சேர்ந்த 32 நிர்வாகிகளுக்கு சொந்த வீடு கட்டித் தரப்போகிறார் சூப்பர் ஸ்டார்.
இவரது பண்ணை நிலத்திற்கு பக்கத்திலேயே இப்படி ஒரு பாக்கியம் வாய்த்திருக்கிறது அவரது ரசிகர்களுக்கு. கேளம்பாக்கம் பண்ணை வீடுதான் ரஜினியின் அமைதி ஆலயம். ஓய்வு நேரத்தில் இங்கே வந்து விடுவார் அவர். திடீரென்று இந்த நிலத்தை ஒட்டியிருக்கும் சுமார் ஒரு ஏக்கர் நிலத்தை தனது ரசிகர்களுக்காக ஒதுக்கியிருக்கிறார் அவர்.
தனக்காக பல வருடங்களாக உழைத்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்குதான் இந்த பரிசை வழங்கியிருக்கிறார் அவர். அரை கிரவுண்ட் நிலத்தை தனித்தனியாக அவர்களுக்கு பிரித்துக் கொடுத்திருக்கும் அவர், அங்கு வீடுகளையும் தனது செலவிலேயே கட்டிக் கொடுக்கப் போகிறாராம். இதற்கு ரஜினி நகர் என்று பெயர் வைப்பார்கள் என்பது நாம் சொல்லியா தெரிய வேண்டும் உங்களுக்கு?
ரஜினி தந்த இன்ப அதிர்ச்சி-ரசிகர்களுக்கு வீடு
Subscribe to:
Post Comments (Atom)
வணக்கம்
வணக்கம்! உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்
வலைப்பூக்கள்
Archives
About this blog
என் நண்பனிடம் இருந்து கற்றுக்கொண்டதன் மூலம் 26.12.2009 அன்றிலிருந்து தொடங்கப்பட்ட இந்த வலைப்பூ முற்றுமுழுதாக சினிமா செய்திகளை தாங்கியது "தமிழ்சிகரம்"






0 comments:
Post a Comment