சிம்பு-தமன்னா ஜோடி ஜனவரி 15 ல் படப்பிடிப்பு

Saturday, January 2, 2010 ·


தமிழ்சினிமாவில் காம்பினேஷன் ரிப்பீட் ஆவதில் ஒன்றும் ஆச்சர்யமில்லை. கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆனால் காம்பினேஷன் ரிப்பீட்டு ஆகும் என்பது திரையுலக சாஸ்திரம்! ஆனால் நினைத்தே பார்க்க முடியாத ரிப்பீட்டு இது. அயன் படத்தில் கொடுத்த கோ-ஆப்ரேஷன் கண்டு மிரண்டு போன கே.வி.ஆனந்த், தனது அடுத்த படமான ‘கோ’ படத்திலும் தமன்னாவையே புக் பண்ணியிருக்கிறாராம்.

“எங்களுக்குன்னு இங்கேயிருக்கிற ஒரே நடிகை தமன்னாதான். அவங்களும் இந்திக்கு போயிடாம இருக்கணும்” என்று ஒரு மேடையில் கவலைப்பட்டார் சிம்பு. ‘யானை வரும் பின்னே’ கதைதான் இவரது பேச்சு. மேடையில் இவர் கவலைப்படும் போதே பேச்சு வார்த்தையை ஆரம்பித்துவிட்டார்களாம். முன்னணி நாயகர்கள் எல்லாருமே தமன்னா பக்கம் கைநீட்ட நிஜமாகவே டேட்ஸ் இல்லாமல் தவித்தார் தமன்னா. எப்படியோ சம்மதிக்க வைத்துவிட்டார்கள்.

இப்படத்தில் நடிக்க இதுவரை வாங்காத சம்பளத்தை வாங்கியிருக்கிறாராம் தமன்னா. ஆச்சர்யம் என்னவென்றால், வழக்கமா வாங்குறதுக்கு மேலே கொஞ்சம் சேர்த்து போட்டு கொடுங்க என்று சிபாரிசு செய்தாராம் சிம்பு. ஜனவரி 15 ந் தேதி படப்பிடிப்புக்கு கிளம்புகிறார்கள். முதலில் இவர்கள் திட்டமிட்டிருந்த இடம் ஐதராபாத். இப்போது அதில் மாற்றம். சென்னையா, அல்லது பெங்களூரா? என்பது இரண்டொரு நாளில் முடிவாகும்.

சிம்பு-தமன்னா ஜோடி! அடுத்த க்ளிப்பிங்ஸ் ரெடி?

0 comments:

வணக்கம்

வணக்கம்
வணக்கம்! உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்

வலம் வரும் நண்பர்கள்

நாட்டு கொடிகளுடன் நண்பர்கள்

free counters

Archives

About this blog

என் நண்பனிடம் இருந்து கற்றுக்கொண்டதன் மூலம் 26.12.2009 அன்றிலிருந்து தொடங்கப்பட்ட இந்த வலைப்பூ முற்றுமுழுதாக சினிமா செய்திகளை தாங்கியது "தமிழ்சிகரம்"